தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

14 January, 2013

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி ?

ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube  விடியோக்களை  டவுன்லோடு செய்வது எப்படி என்பதை நாம் பார்க்க போகிறோம்.

இதற்கு உங்களிடம் தரமான  3ஜிஆண்ட்ராய்ட் வகை மொபைல் போனும் அதனுடன் இணைந்த 3ஜி இண்டர்னெட் இனைப்பும் அவசியம்.ஏனெனில் ஆண்ட்ராய்டு வகை மொபைல் போன்கள் எல்லாமே அதன் சாப்ட்வேரை மேம்படுத்த  புதிய வகை அப்பிகேசன்களை டவுன் லோடு செய்ய, புதிய கேம்களை தரவிரக்கம் செய்ய போன்ற பலவகையான பயன் பாட்டிற்கு இண்டர்னெட் இணைப்பு அவசியம்.


இப்பொது நாம் YouTube  விடியோக்களை அதன் வரிசையிலே டவுன் லோடு எளிதாக செய்ய கூடிய முறையைதான் பார்க்க போகிறோம் . அதாவது நாம் ஏதாவது காமொடி,புது பாட்டுகள்,அரிதான நிகழ்ச்சிகளை எப்படி YouTube  ல் நமது  கணக்கில்  நுழைந்து பிடித்த நிகழ்ச்சிகளை பலவற்றை தனி போல்டரில்   போட்டு சேமித்து வைத்து இருப்போம் .அதை நமது மொபைலில் டவுன் லோடு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம்.

அதே போல் தான் இந்த அப்பிளிகேசனிலும் அப்படியே  YouTube யை  அதன் வடிவத்திலே பயன் படுத்தலாம் . அதாவது விடியோக்களை பார்க்கலாம்  பிடித்து இருந்தால் அதை டவுன்லோடு செய்யலாம் அதற்கு உங்கள் லைக்ஸை பதிவு பண்ணலாம்.

இதற்கு நாம் பயன் படுத்தும் அப்பிளிகேசன்  பெயர் tubemate


இந்த அப்பிளிகேசனை டவுன்லோடு செய்யும் முறை இது டைரேட்டாக  கூகிள் பிளை ஸ்டோரில் டவுன் லோடு செய்ய முடியாது.இது வெளி மார்க்கெட்டில் இருந்து தான் டவுன் லோடு செய்ய முடியும் .அதற்கு சில மாற்றங்கள் உங்களுடைய  மொபைலில் செய்ய வேண்டும்.

முதலில் உங்கள் மொபைலில் MENU விற்கு சென்ற பின்  SETTING  போக வேண்டும் அடுத்து APPLICATION என்பதை கிளிக் செய்யவும் அதில் UNKNOWN SOURCES  என்பதில் டிக் செய்ய கிளிக் செய்ய வேண்டும் அதில் கன்பார்முக்கு OK செய்யவும் அவ்வளவுதான் வேலை முடிந்தது.

இப்போது INTERNET மெனுவிற்கு சென்று  GOOGLE  ஹோம் பேஜ்ஜிற்கு சென்று அதில் m.tubemate.net என்று டைப் செய்து சர்ச் செய்யவும் வரும் முடிவில் முதலில் தோன்றும்  m.tubemate.net 1.05.45 என்பதை கிளிக் செய்து போகவும் வரும் மெனுவில் download (Android Freeware) உள்ளதை கிளிக் செய்து வரும் மெனுவில் டவுன்லோடு(இன்ஸ்டால்) பண்ணவும். இப்பொழுது உங்கள் மொபைலில் டியூப்மேட் மெனு பதியப்பட்டு இருக்கும்.

இதில் உள்ள சிறப்பு நீங்கள் டவுன் லோடு  செய்ய இருக்கும் விடியோவை  அதன்  படத்தின் மேல் கிளிக் செய்தவுடன் இரண்டு மெனுவில் ஒன்று டவுன்லோடு செய்ய மற்றொன்று WATCH என்பதை கிளிக் செய்தால் விடியோவை நேரடியாகவே கண்டுகளிக்கலாம் அதவும் வேண்டிய  ரொல்வியூசன் அளவுகளில் அதாவது படத்தின் தரத்தில் பார்க்கலாம் அதே முறையிலும் டவுன்லோடு செய்யும் போதும் செயல் படுத்தலாம். உங்களுக்கு அதிக தரத்தில் விடியோ வேண்டுமானாலும் அதாவது  H.D  தர வகையிலும் பதிவிறக்கம் செய்யலாம். டவுன்லோடு செய்யும் தரத்திகற்கேற்ப  பதிவிறங்கும் கொள்ளலளவு மாறும்.

இனி உங்கள் விருப்பம் போல் டவுன் லோடு செய்து அசத்துங்கள்.
அனைத்து வாசகருக்கும், நன்பருக்கும் “ தை பொங்கல் திரு நாள் ” வாழ்த்துகள்.

இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் பின்னோட்டத்தில் தெரிய படுத்தவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...